ஐயா /அம்மா, எனது தொலைபேசிக்கு எனக்கு ஒரு செய்தி வந்தது. Amazon நிறுவனம் sales ஆர்டர் பிளாட்போர்ம் என்று சொன்னார்கள். இதன் மூலம் நீங்கள் பணம் கமிஷன் பெறலாம் மற்றும் தினமும் சம்பளம் 1788 என்று சொன்னார்கள்.எனக்கு திருமணமாகி 2குழைந்தைகள் இருக்கிறார்கள்.நானும் வீட்டில் வேலை இல்லாமல் இருப்பதால் சரி பகுதி நேரமாக வேலை பார்ப்போம் என்று சொல்லி ஆரம்பித்தேன்.முதலில் 200 ரூபாய் முதலீடு செய்ய சொன்னார்கள். பிறகு 400 ரூபாய் என்னை பணம் எடுத்து கொள்ள சொன்னார்கள். இதற்கு அடுத்த டாஸ்க் என்று கூறி 1000 ரூபாய் முதலீடு செய்ய சொன்னார்கள். நானும் முதலில் பணம் எடுத்து கொள்ள சொல்லும் படி மறுபடியும் எடுத்து கொள்ள சொல்லுவார்கள் என்று முதலீடு செய்தேன் ஆனால் அவர்கள் மறுபடி மறுபடியும் முதலீடு செய்தான் தான் உங்கள் பணத்தை திரும்ப பெற முடியும் என்று சொன்னார்கள். ஆனால் நான் இது வரை 13,400 முதலீடு செய்துள்ளேன். ஆனால் அவர்கள் இன்னும் 21000 ரூபாய் செலுத்தினால் தான் உங்கள் பணத்தை நீங்கள் முழுமையாக திரும்ப பெறலாம் என்று கூறுகிறார்கள்.என்னுடைய முதலீடு பணத்தை மட்டும் திரும்ப அவர்களிடம் இருந்து வாங்கி தருமாறும் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்குமாறும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.6266433360 இந்த தொலைபேசி எண்ணையும் இணைத்து கொள்ளுங்கள். இது ஒரு பெண் பேசினார்.இதில் இருந்து தான் முதலில் செய்தி வந்தது. பிறகு தான் அந்த பெண் இன்னொரு நபரிடம்(மேலே கொடுக்கப்பட்ட எண்)இந்த பெண் பேச சொன்னார்கள்.